×

இத்தாலி ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் அசத்தல்

ரோம்: இத்தாலி சர்வதேச டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை தக்கவைத்தார். இறுதிப் போட்டியில் துனிசியாவின் ஆன்ஸ் ஜெபருடன் (27 வயது, 7வது ரேங்க்) நேற்று மோதிய ஸ்வியாடெக் (20 வயது, முதல் ரேங்க்) 6-2, 6-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 22 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. நடப்பு சீசனில் ஸ்வியாடெக் தொடர்ச்சியாக 5வது தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளதுடன், தொடர்ச்சியாக 25 வெற்றிகளைப் பதிவு செய்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Italy Open Tennis , Italy Open Tennis: Swiatech Stunning
× RELATED இத்தாலி ஓபன் டென்னிஸ்: எலினா, பிளிஸ்கோவா கால் இறுதிக்கு தகுதி