×

அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் 10 பேர் சுட்டுக்கொலை

பப்பல்லோ: அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் 18 வயது இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பப்பல்லோ நகரில் கருப்பினத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பெரிய சூப்பர் மார்க்கெட் உள்ளது. பல்பொருள் அங்காடியில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். இவர் நடத்திய தாக்குதலில் மொத்தம் 13 பேர் காயமடைந்தனர். அவர்களில் 11 பேர் கருப்பினத்தவர்கள். பலியான 10 பேரை தவிர மற்ற 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாக்குதல் நடத்தியவர் 18 வயது இளைஞர். கான்க்ளின் பகுதியை சேர்ந்த இவருடைய பெயர் பேட்டன் ஜெனட்ரோன். எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. முதல் கட்ட விசாரணையில் இது இனவெறி தாக்குதல் என்பது தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவத்தை வெறுப்புணர்வு குற்றமாகவும், இன ரீதியாக நடத்தப்பட்ட வன்முறை தீவிரவாதமாகவும் கருதி விசாரித்து வருவதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் ஆயுதங்களை வைத்திருப்பது மக்களின் அரசியலமைப்பு உரிமைகளில் ஒன்றாகும். இதனால், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இந்தியர்களும் அவ்வப்போது கொல்லப்பட்டு வருகின்றனர்.

Tags : US , 10 shot dead in US supermarket
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...