இளம்பெண் பாலியல் குற்றச்சாட்டு ராஜஸ்தான் அமைச்சர் மகனுக்கு வலை

புதுடெல்லி: இளம் பெண் கொடுத்த  பாலியல் பலாத்கார புகாரின் காரணமாக, ராஜஸ்தான் அமைச்சரின் மகனை கைது செய்ய டெல்லி போலீசார் ஜெய்ப்பூரில் முகாமிட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநில அமைச்சராக உள்ள மகேஷ் ஜோஷியின் மகன் ரோகித் ஜோஷி. இவர் மீது கடந்த வாரம் இளம் பெண் ஒருவர் டெல்லியில் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். இதையடுத்து, டெல்லி போலீசார் ரோகித்தை கைது செய்ய ராஜஸ்தான் சென்றுள்ளனர். அவர் இல்லாததால், விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனை ஒட்டி விட்டு சென்றனர். காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் இவர்கள் நுழைந்து, அமைச்சரின் மகனை டெல்லி போலீசார் கைது செய்ய முயற்சிதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories: