தீ விபத்தில் 27 பேர் பலி டெல்லியில் கட்டிட உரிமையாளர் கைது

புதுடெல்லி: டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே  உள்ள 4 அடுக்குமாடி வணிக வளாகத்தில் கடந்த 13ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 29 பேரை காணவில்லை. கட்டிட இடிபாடுகளில் இருந்து இதுவரை சுமார் 50 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் சிக்கி உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. நான்காவது தளத்தில் இயங்கி வந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஹரிஷ் கோயல் மற்றும் வருண் கோயல் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான கட்டிடத்தின் உரிமையாளர் மணீஷ் லக்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர் நேற்று கைது செய்யப்பட்டார். இது குறித்து, புறநகர் துணை கமிஷனர் சமீர் சர்மா கூறுகையில், ``டெல்லி மற்றும் அரியானா போலீசார் இணைந்து நடத்திய சோதனையில், தலைமறைவாக இருந்த கட்டிட உரிமையாளர் மணீஷ் லக்ரா கைது செய்யப்பட்டார்,’’ என்று தெரிவித்தார். இதில் தொடர்புடைய மீதி 19 பேரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: