தமிழகத்தில் இளைஞர் நலன் வாரியம் அமைக்க வேண்டும்: முதல்வருக்கு இளைஞர் சங்கம் வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன் வெளியிட்ட அறிக்கை: இளைஞர்கள் நேசிக்கும் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஓர் ஆண்டில் பல்வேறு சாதனைகளை செய்து இருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் சார்பில் வாழ்த்துகிறோம். தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இளைஞர் சமூதாயத்திற்கு பல்வேறு உதவி செய்து வருகிறீர்கள். இளைஞர் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட தாங்கள் இளைஞர் நலன் வாரியம் அமைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். பல்வேறு வாரியங்கள் திமுக ஆட்சியில் தலைவர் கலைஞரால் தொடங்கப்பட்டது. தாங்கள் ஆட்சிக்கு வந்தது இளைஞர் சமுதாயத்திற்கு மிக பெரிய சந்தோஷம் நீங்கள் இன்னும் இளைஞர் சமுதாயத்திற்கு செய்வீர்கள் என்று நம்பிக்கை தமிழக இளைஞர்கள் இடத்தில் உள்ளது.

Related Stories: