அக்‌ஷய் குமாருக்கு மீண்டும் கொரோனா

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், ஏற்கெனவே இவருக்கு கொரோனா ஏற்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தார். தற்போது கொரோனா பாதிப்புகள் கணிசமாக குறைந்துள்ள நிலையில் அக்‌ஷய் குமாருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வருகிற மே 17ம் தேதி தொடங்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் அக்‌ஷய் குமாருக்கு இந்திய கலைஞர்கள் அணிவகுப்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பதாக இருந்தது. தற்போது இதில் அவர் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அக்‌ஷய்குமார் கூறியிருப்பதாவது: கேன்ஸ் திரைப்பட விழாவில் உள்ள இந்திய பெவிலியனில் நமது சினிமா கால்பதிப்பதை உண்மையிலேயே எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் துரதிருஷ்டவசமாக கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும், விழாவில் பங்கேற்கும் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். கேன்ஸ் விழாவை நிறைய மிஸ் செய்வேன். இவ்வாறு அக்‌ஷய் குமார் கூறியுள்ளார்.

Related Stories: