பாலிவுட் ஹீரோக்கள் என் படத்தை புறக்கணிக்கிறார்கள்: கங்கனா ரனவத்

மும்பை: கங்கனா ரனவத் தற்போது தாக்கட் என்ற ஆக்‌ஷன் படத்தில் நடித்துள்ளார். இது ஹாலிவுட்டில் வெளிவரும் சூப்பர் ஹீரோயின் போன்ற கதை அமைப்பை கொண்ட படம். இந்த படத்தின் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அமிதாப்பச்சன் இந்த பாடலை தனது டிவிட்டரில் பகிர்ந்து விட்டு நீக்கி விட்டார். இதுகுறித்து கங்கனா  கூறியிருப்பதாவது: நான் நல்ல படங்களை பாராட்டுகிறேன். காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை முதலில் நான்தான் பாராட்டினேன். நான் எல்லோருடைய படத்தையும் பாரபட்சமின்றி பாராட்டுகிறேன். சித்தார்த் மல்ஹோத்ரா, கரண் ஜோஹர் படங்களை பாராட்டுகிறேன். முடிந்த அளவு விளம்பர படுத்துகிறேன். அமிதாப்பச்சன் என் பட பாடலை பகிர்ந்து விட்டு, நீக்கியது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். அதற்கான காரணம் எனக்கு தெரியாது. அஜய் தேவ்கன் ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடிக்கிறார். ஆனால் என் படத்தில் நடிக்க மாட்டார். நான் மற்றவர்களின் படங்களுக்கு ஆதரவாக இருப்பது போன்று அவர்கள் என் படங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

Related Stories: