×

திருவள்ளூர் அருகே பயங்கரம் பைக் மீது ஆவின் வேன் மோதி 2 வாலிபர்கள் பரிதாப பலி: டிரைவர் கைது

திருவள்ளூர்: பைக் மீது ஆவின் பால் வேன் மோதியதில், சென்னையை சேர்ந்த 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியானார்கள். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் ஐயப்பன் (28). பைக் ஷோரூமில் பணியாற்றி வந்தார். இவரது நண்பர், சதீஷ் (26). ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் இரவு ஐயப்பன், சதீஷ் உள்பட நண்பர்கள் 4 பேர், பைக்கில் திருத்தணி முருகன் கோயிலுக்கு புறப்பட்டனர். ஒரு பைக்கை ஐயப்பன் ஓட்டினார். சதீஷ் பின்னால் உட்கார்ந்து இருந்தார். ஆவடி -  திருவள்ளூர் சாலை தொழுவூர் கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது, சாலை வளைவில் ஐயப்பன் பைக் திரும்பியது. அப்போது, காக்களூர் ஆவின் பால் பண்ணையில் பால் பாக்கெட் ஏற்றிக்கொண்டு திருநின்றவூர் நோக்கி சென்ற வேன், ஐயப்பன் பைக் மீது பயங்கரமாக மோதியது.

இதில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டனர். அதில் ஐயப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார். சதீஷ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமணைக்கு அனுப்பினர். ஆனால் செல்லும் வழியிலேயே சதீஷ் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் டில்லிபாபு சம்பவ இடத்துக்கு சென்று ஐயப்பன் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவர் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, மேப்பூர் தாங்கல் கிராமத்தை தினேஷ் (26) என்பவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விபத்து ஏற்படுத்திய வேனை, பறிமுதல் செய்தனர்.

பைக் மீது, ஆவின் பால் வேன் மோதி, 2 வாலிபர்கள் பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தை சேர்ந்தவர் அன்பு (38). எலக்ட்ரீஷியன். இவரது மனைவி பாமா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று நண்பர்களுடன் அன்பு, பெரியபாளையம் பகுதியில் உள்ள ஆரணி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது அன்பு, எதிர்பாராதவிதமாக சேற்றில் கொண்டார். இதை பார்த்த நண்பர்கள், அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. தகவலறிந்து பெரியபாளையம் போலீசார், தேர்வாய் சிப்காட் தீயணைப்பு நிலையத்தில் இருந்து மீட்பு படை வீரர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு சேற்றில் சிக்கிய அன்புவை, சுமார் 2 மணிநேரம் போராடி சடலமாக மீட்டனர். பின்னர் போலீசார், சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

* மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் சாவு
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கத்தை சேர்ந்தவர்  நவீன் (31). எலக்ட்ரீஷியன். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு ஆண் குழந்தை உள்ளனர். நேற்று முன்தினம் நவீன், காக்களூர் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் எலக்ட்ரீஷியன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மழை பெய்தது. அந்த நேரத்தில், அருகில் இருந்த மின் வயரை இழுக்கும்போது, அருகில் சென்ற உயர் மின் அழுத்த கம்பியில் உரசி, நவீன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் துடிதுடித்தார். இதை பார்த்ததும், அங்கிருந்த மக்கள், அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நவீன் பரிதாபமாக இறந்தார். புகாரின்படி திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Avin ,Tiruvallur , Avin van collides with bike near Tiruvallur, 2 youths killed, driver arrested
× RELATED ஆவின் நிறுவனம் ஆவின் நெய் தள்ளுபடி விலையில் விற்பனை