கல்லிடைக்குறிச்சியில் பட்டப்பகலில் பயங்கரம் மக்கள் தமிழ்தேசம் கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை

அம்பை: நெல்லை மாவட்டம், தெற்கு கல்லிடைக்குறிச்சி மூலச்சி ஊராட்சி செம்பத்திமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார் (47). இன்ஜினியரான இவர், மக்கள் தமிழ்தேசம் கட்சியில் மாநில அமைப்புச் செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு மனைவியும், ராகுல் என்ற மகனும், தமிழரசி என்ற மகளும் உள்ளனர். நேற்று காலை நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகுமார், பிற்பகல் 2 மணியளவில் பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவரை காரில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், கல்லிடைக்குறிச்சியில் இருந்து செம்பத்திமேடு செல்லும் ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வழிமறித்து சரமாரியாக வெட்டினர். இதில் சுகுமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்தார். மர்மநபர்கள் காரில் ஏறி தப்பிச் சென்றனர். தகவலின்படி கல்லிடைக்குறிச்சி போலீசார் வந்து சம்பவம் நடந்த பகுதிகள் அருகேயிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் வழக்குப்பதிந்து கொலைக்கான காரணம் என்ன?, கொலையாளிகள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: