×

ஸ்ரீகாளஹஸ்தி கோயில் தரிசன நேரம் மாற்றம்

ஸ்ரீகாளஹஸ்தி: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலின் நிர்வாக அதிகாரி பெத்திராஜூ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆந்திராவில் கொரோனா பரவல் காரணமாக பகுதி நேர ஊரடங்கு மாநில அரசு அமல்படுத்தி உள்ளது. மேலும், தொற்று பரவல் குறைய தொடங்கி உள்ளதால் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தியது. காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை நீடித்ததால் கோயிலில்  தரிசன நேரங்களிலும் மாற்றங்கள் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று முதல் சிவன் கோயிலில் காலை 6 மணி முதல் பகல் 1.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். கோயிலில் நடக்கும் ராகு- கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் ஈடுபடலாம். ஆனால், கோயிலில் நடக்கும் மற்ற ஆர்ஜித சேவைகள் அனைத்தும் கோயில் சார்பில் மட்டுமே பக்தர்களின்றி நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது….

The post ஸ்ரீகாளஹஸ்தி கோயில் தரிசன நேரம் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Srikalahasti ,Pethraju ,Srikalahasti Shiva temple ,Chittoor district ,Andhra ,
× RELATED விவசாயி டிராக்டரை எரித்த தெலுங்கு தேசம் கட்சியினர்