சென்னை பல்கலை பட்டமளிப்பு விழா முதல்வர் பங்கேற்பு

சென்னை: சென்னைப் பல்கலைக் கழகத்தின் 164ம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது. இந்த விழாவில் தமிழக ஆளுநரும் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமையேற்று, மாணவ, மாணவியருக்கு பட்டங்களை அளிக்கிறார். அதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டமளிப்பு விழாவின் தலைமை விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுகிறார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் இணை வேந்தரும், தமிழக உயர்கல்வித்துறையின் அமைச்சருமான பொன்முடி பட்டமளிப்பு விழாவில் வாழ்த்திபேசுவார். சென்னைப் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் காலை 10 மணிக்கு பட்டமளிப்பு விழா தொடங்குகிறது.

Related Stories: