அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் பறிமுதல் மாட்டு வண்டிகள் வீணாகும் அவலம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் காவல் நிலையத்தின் எல்லை பகுதிகளில் தென்பெண்ணையாறு, துரிஞ்சல் ஆறு ஆகிய இரு  ஆறுகள் உள்ளன. இங்கிருந்து கடந்த 3 வருடமாக மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்பட்டது. பின்னர் காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கையால் மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால்  50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கடந்த 3 வருடமாக பறிமுதல் செய்யப்பட்டு அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வண்டிகள் மழை,  வெயிலில் கிடந்து வீணாகிறது. மேலும் மற்ற வழக்குகளில்  தொடர்புடைய வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் வண்டிகள் அடைத்து கொண்டிருக்கிறது. ஆகையால் பறிமுதல் செய்த மாட்டு வண்டிகளுக்கு அபராதம்  விதித்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: