2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் கருடசேவை கோலாகலம்

காஞ்சிபுரம்: 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் கருடசேவை, இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 108 வைணவத் திவ்ய தேசங்களில், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் முக்கியனமான தளம். இங்கு, வருடத்துக்கு மூன்று கருட சேவை நடைபெறும் என்றாலும், வைகாசி மாதம் வரும் கருடசேவை மிகச்சிறப்பு. காஞ்சிபுரத்தில் உள்ள அத்தி வரதர்க்கு பெயர் பெற்ற வரதராஜப் பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா, கடந்த வெள்ளிகிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து, தினம் ஒரு வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்தார். இந்தப் பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாகக் கருதப்படும் கருடசேவை, இன்று காலையில் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 4-30 மணிக்கு பெருமாள் வெளியே வந்தார். அலங்காரம் முடிந்த நிலையில், கோயில் உள்பகுதியில் உள்ள ஆழ்வார்கள் சந்நிதியில் வைத்து பாசுரம் பாடினர். சுவாமி, கோயிலில் கோபுரவாசல் தரிசனம் முடித்த வரதர், ரங்கசாமி குளம், விளக்கடி கோயில் தெரு, பிள்ளையார் பாளையம், புத்தேரித் தெரு வழியாக, கச்சபேஸ்வரர் கோயில் அருகே உள்ள மண்டபத்திற்கு வருகை தருவார் பெருமாளை வழிபடுவதற்கு வழியெங்கும் பக்தர்கள் கூட்டம் நிரம்பிவழிந்தது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த ஆண்டு திருவிழா நடைபெறுகின்றது. 2019 ஆண்டுக்கு பிறகு காஞ்சிபுரத்தில் மீண்டும் மக்கள் கூட்டம் கூடியதால் வரதர் உற்சவத்தால், காஞ்சி நகரே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

Related Stories: