நெல்லை முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் கிராமத்தில் கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு?

நெல்லை: நெல்லை பொன்னாக்குடி அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. நெல்லை முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் தொழிலாளர்கள் நேற்று இரவு குவாரி பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த பாறை ஒன்று திடீரென சரிந்து விழுந்ததில், 300 அடி ஆழ பள்ளத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பள்ளத்தில் சிக்கிய 2 பேர், உயிருடன் மீட்கப்பட்டனர்.

மேலும், 300 அடி பள்ளத்தில் 3 ஜேசிபி இயந்திரம் மற்றும் இரண்டு லாரிகள் சிக்கியுள்ளது. ராட்சச பாறை விழுந்த இடத்தில் ஆறு தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், இருவர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பவைக்கப்பட்டனர். மேலும் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து கல்குவாரி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரமாண்ட கிரேன் மூலம் பாறைகளை அகற்றும் பணி நடைபெறுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லை சரக டிஜிபி பரவேஷ்குமார் கல்குவாரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விபத்து நடந்த கல்குவாரியில் பாதிக்கப்பட்ட தொழிலாளரல்களின் உறவினர்கள் குவிந்து வருகின்றனர். கல்குவாரியில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணியில் சுணக்கம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: