×

நெமிலி அருகே கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க ராட்சத பள்ளம்

நெமிலி: நெமிலி அருகே கொசஸ்தலை ஆற்றிலிருந்து இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் கள்ளத்தனமாக மணல் கடத்தி செல்வதாக நெமிலி தாசில்தார் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் தினகரன், விஏஓ கோபிநாத் மற்றும்  கீழ் வெங்கடாபுரம் ஒன்றிய கவுன்சிலர் விநாயகம்,

தலைவர் அம்மு தட்சணாமூர்த்தி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று நெமிலியில் இருந்து கீழ்வெங்கடாபுரம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க ஜேசிபி இயந்திரம் மூலம் பல்வேறு இடங்களில் ராட்சத பள்ளங்கள் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். பள்ளங்களை மூடி யாராவது மணல் கடத்திச் சென்றால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags : Nemili , Giant ditch to prevent sand robbery in Kosastalai river near Nemli
× RELATED பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு