×

கேரளாவில் பரவியுள்ள தக்காளி காய்ச்சல் கிருமியால் பாதிப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

மாமன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில் நிதிநிலை அறிக்கையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 136 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. அதில், முதல் அறிவிப்பு திருவாரூர் மாவட்டத்தில் செயல்படுத்தபட்டுள்ளது.

அறிவிப்பு எண் 42-ன் படி தமிழகத்தில் இருக்கின்ற 2,127 ஆரம்ப சுகா தார நிலையங்களில் காலை 7 மணி முதல் நீரிழிவு நோய்க்கான ரத்த மாதிரி பரிசோதனை திட்டம் இன்று (நேற்று) முதல் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பரவியுள்ள தக்காளி காய்ச்சல் கிருமியால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை. இது தொற்று நோய் வகையானது இல்லை என்ற போதிலும் கேரளா- தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.



Tags : Kerala ,Minister ,Ma Subramanian , Spread in Kerala Tomato fever No harm from germs: Interview with Minister Ma Subramanian
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...