×

தமிழ்நாடு அமைச்சூர் கபடி சங்க நிர்வாகிகள் தேர்தல் அறிவிப்புக்கு தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் அசோக்நகரை சேர்ந்த கபடி விளையாட்டு வீரர் திருவேல் அழகன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கபடி விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து அவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அமைச்சூர் கபடி சங்கம் அமைக்கப்பட்டது. தற்போதுள்ள தலைவர் மற்றும் செயலாளர் பதவிக்காலம் முடிவடைந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் தொடர்ந்து பதவியில் உள்ளனர்.தமிழகத்தில் 38 மாவட்ட கபடி சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும் தலைவர் மற்றும் செயலாளர்கள் மாநில கபடி சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளரை தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும்.  ஆனால், தற்போது 25 மாவட்ட சங்களுக்கான தேர்தல் மட்டுமே நடந்துள்ளது.

இந்த நிலையில், மாநில அளவிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் மே 22ம் தேதி நடைபெறும் என்று மாநில சங்கம் ஏப்ரல் 29ம் தேதி அறிவித்துள்ளது. இது தேசிய விளையாட்டு மேம்பாடு விதிகளுக்கு முரணானது. எனவே, இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.  இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.முரளி ஆஜராகி,  தேர்தலை தேசிய விளையாட்டு ேமம்பாடு விதிகளுக்கு உட்பட்டு தேர்தலை நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என்றார்.

 வழக்கை விசாரித்த நீதிபதி, தேசிய விளையாட்டு மேம்பாடு விதிகளுக்கு உட்பட்டு இந்த தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. தேர்தல் அறிவிப்பு பொதுதளத்தில் அதாவது பத்திரிகைகள் வாயிலாக அறிவிக்கப்படவில்லை. எனவே, ஏப்ரல் 29ம் தேதி வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Tags : Tamil Nadu Minister Kabaddi Association ,ICC , Tamil Nadu Ministry Kabaddi Association executives barred from announcing election: ICC order
× RELATED ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது