அறநிலையத்துறையில் 23 உதவி ஆணையர்கள் டிரான்ஸ்பர்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: அறநிலையத்துறை செயலாளர் சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் உதவி ஆணையர் விஜயராணி விழுப்புரம் கோட்ட உதவி ஆணையராகவும், தியாகராஜசுவாமி கோயில் உதவி  ஆணையர் சித்ராதேவி திருவள்ளூர் உதவி ஆணையராகவும், பழனி தண்டாயுதபாணி கோயில் இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் அய்யம்பாளையம் வாழைத்தோட்டத்து அய்யன் கோயில் உதவி ஆணையராகவும், ஆணைமலை மாசாணியம்மன் கோயில் உதவி ஆணையர் கருணாநிதி கோவை உதவி ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.

இதேபோல், ஆணையர் அலுவலக கண்காணிப்பாளர் லட்சுமி பாஸ்கரன் சென்னை உதவி ஆணையர் -3 ஆகவும், சென்னை மண்டலம்-2 இணை ஆணையர் அலுவலக மேலாளர் பாஸ்கரன் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் இணை ஆணையரின் நேர்முக உதவியாகளராகவும், ஆணையர் அலுவலக கண்காணிப்பாளர் ராஜா ஆணையர் அலுவலக சட்ட சேர்மம் உதவி ஆணையராகவும், தஞ்சாவூர் இணை ஆணையர் அலுவலக மேலாளர் ரவிச்சந்திரன் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரர் கோயில் உதவி ஆணையராகவும், நெல்லையப்பர் கோயில் கண்காணிப்பாளர் திருநெல்வேலி உதவி ஆணையராகவும், ஆணையர் அலுவலக கண்காணிப்பாளர் சுவாமி நாதன் பவானி சங்கமேஸ்வரர் கோயில் உதவி ஆணையராகவும், திருப்பூர் இணை ஆணையர் அலுவலக மேலாளர் லட்சுமி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்  நேர்முக உதவியாளராகவும், கன்னியாகுமரி மாவட்ட கோயில்கள் கண்காணிப்பாளர் தங்கம் நாகர்கோயில் உதவி ஆணையராகவும் பதவி உயர்வு வழங்கி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: