சல்மான் கானின் தம்பி பாலிவுட் நடிகர் விவாகரத்து

மும்பை: கருத்து வேறுபாடு காரணமாக பாலிவுட் நடிகர் சோஹைல் கான் மற்றும் அவரது மனைவி சீமா கான் இருவரும் பரஸ்பர விவாகரத்து மனுதாக்கல் செய்துள்ளனர்.பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான சோஹைல் கான், சல்மான் கானின் தம்பி. கடந்த 1998ம் ஆண்டு ஆடை வடிவமைப்பாளரான சீமா கான் என்பவரை மணந்தார்: இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சமீபத்தில் மும்பையில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி இருவரும் பரஸ்பர மனு தாக்கல் செய்துள்ளனர். இருவரும், நீதிமன்றத்திற்கு நேரில் வந்து மனுதாக்கல் செய்தனர்.

இந்த ஜோடி கடந்த சில காலமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சீமா கான், ‘சில நேரங்களில் உங்களுக்கு வயதாகும்போது, ​​​​உங்களுடைய உறவுகள் வெவ்வேறு திசைகளுக்குச் செல்வதை பார்க்க முடியும். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதால், எல்லாவற்றையும் ஏற்க முடியாது. சோஹைலும் நானும் வழக்கமான தம்பதிகளாக இல்லை. ஆனால் நாங்கள் ஒரு குடும்பமாக உள்ளோம். எனக்கு அவர், அவருக்கு நான். எங்கள் குழந்தைகளின் முடிவில் முக்கிய முடிவெடுப்போம்’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: