×

சரத்பவார் குறித்து நடிகை சர்ச்சை கவிதை

புனே:பாலிவுட் நடிகை கேதகி சித்தாலே, சமூக ஊடகங்களில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவருவார். அவரது பல பதிவுகள் அரசியல் ரீதியாகவும் சர்ச்சைகளை ஏற்படுத்தும். அந்த வகையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நேரடியாக குறிவைத்து, அவரை மோசமான மற்றும் இழிவான வார்த்தைகளில் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதுதொடர்பாக அவரது பேஸ்புக் பதிவில், கவிதை ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், சரத் ​​பவாரை மிகக் கீழ்த்தரமான வார்த்தைகளில் கண்டித்தும், கொச்சையான வார்த்தைப் பிரயோகம் செய்தும் கவிதையை வெளியிட்டுள்ளார். உண்மையில் இந்த கவிதையை எழுதியவரின் பெயர் நிதின் பாவே என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இவரது சர்ச்சைக்குரிய கவிதை பதிவுக்கு பல்வேறு தரப்பினரும் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், கேதகி சித்தாலேவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு எதிராக போலீசில் புகாரளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



Tags : Sarabhavar , Actress controversy poem about Sarabhavar
× RELATED கவனமாக பேசுங்க சச்சின்: சரத்பவார் அட்வைஸ்