×

இலங்கையில் 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!: பதவி பிரமாணம் செய்து வைத்தார் அதிபர் கோத்தபய ராஜபக்சே..!!

கொழும்பு: இலங்கையில் 4 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வன்முறையால் இலங்கை அரசு திணறி வருகிறது. அதிபர் பதவியிலிருந்து கோத்தபய  ராஜபக்ச பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கட்டுக்கடங்காத போராட்டத்தால் அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். மக்களின் தொடர் போராட்டத்தால் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சேவும் கடந்த 9ம் தேதி ராஜினாமா செய்தார். இருப்பினும் போராட்டம் ஓயவில்லை. மகிந்த ராஜபக்சே வீடு, அவரது ஆதரவாளர்களின் வீடுகள், ஓட்டல்களுக்கு தீ வைக்கப்பட்டன.

மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் தலைநகரைவிட்டு வெளியேறினர்.  அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்திருப்பதால் புதிய அமைச்சரவை விரைவில் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில், தற்போது, இலங்கையில் அதிபர் கோத்தபய  ராஜபக்சே தலைமையில் நான்கு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு அதிபர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இலங்கையில் 4 புதிய அமைச்சர்களை அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்தார். வெளிநாட்டு விவகாரங்கள் துறை, பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி துறைகளுக்கு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, தினேஷ் குணவர்த்தனே (பொதுப்பணித்துறை), காஞ்சனா விஜேசேகர (மின்சாரத்துறை) அமைச்சராக பதவி ஏற்றுள்ளனர். இதேபோல், ஜி.எல்.பெரீஸ் (நிதித்துறை), பிரசன்ன ரணதுங்கா (நகர்ப்புற வளர்ச்சித்துறை) அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர். இந்த நான்கு அமைச்சர்களும் அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் பதவியேற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முழு அமைச்சரவையை நியமிக்கும் வரை நாடாளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயல்பாடுகளை கவனிக்க 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். ஏற்கனவே இடைக்கால அரசின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுள்ள நிலையில் 4 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.


Tags : Sri Lanka ,President ,Gotabhaya Rajapaksa , Sri Lanka, New Ministers, Inauguration
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்