×

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை, கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட உத்தரவு

பாசனத்திற்காக அமராவதி அணையிலிருந்து 2074.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், அமராவதி அணை பழைய பாசனத்திற்குட்பட்ட முதல் எட்டு பழைய இராஜ வாய்க்கால்களின் (இராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு)  பாசனப் பகுதிகளுக்கு வரும்.

 16.05.2022 முதல் 28.09.2022 வரை 135 நாட்களில் 80 நாட்கள் தண்ணீர் திறப்பு 55  நாட்கள் தண்ணீர் அடைப்பு என்ற அடிப்படையில் முதல் போக பாசனத்திற்காக அமராவதி அணையிலிருந்து 2074.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில்  7520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆழியாறு அணை;

கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு பழைய ஐந்து  வாய்க்கால்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு முதல் போக பாசனத்திற்கு 16.05.2022 முதல் 15.10.2022 முடிய தொடர்ந்து 152 நாட்களுக்கு ஆழியாறு அணையிலிருந்து 1205 மில்லியன் கன அடிக்கு  மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் கோயம்புத்தூர் மாவட்டம், ஆணை மலை வட்டத்திலுள்ள   6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Tags : Tiruppur District ,Amravati Dam ,Govai District ,Bhediyaru Dam , Order to open water for irrigation from Amravati Dam, Tirupur District and Azhiyaru Dam, Coimbatore District
× RELATED திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில்...