×

தமிழகத்தில் வரும் 18ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை..!!

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் வரும் 18ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூரில் கனமழை பெய்யக்கூடும். மே 15, 16ல் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மே 17, 18ல் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

இன்றும், நாளையும் கேரளம், லட்சத்தீவு, குமரிக்கடல், வங்கக்கடலில் தென்மேற்கு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். மே 16ல் லட்சத்தீவு, கேரளம், அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதிகளில் பலத்த சூறாவளி வீச வாய்ப்பு இருக்கிறது. மணிக்கு 40 - 50 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


Tags : Tamil Nadu , Tamil Nadu, heavy rain, fishermen, meteorological center
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...