புதுச்சேரியில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய பிரபல ரவுடி கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபோதையில் கார் ஓட்டி 25-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய பிரபல ரவுடியின் காரை பொதுமக்கள் அடித்து நொறுக்கியத்துடன் அவரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். முத்தரையர் பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் என்ற நண்டு ஆறுமுகம், பிரபல ரவுடியான இவர் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் பாண்டி மெரினா கடற்கரைக்கு பொழுதுபோக்கிற்காக சென்றுள்ளனர்.

அப்பொழுது கடற்கரையில் அமர்ந்து மதுகுடித்த ஆறுமுகம் நிதானம் இழந்து குடும்பத்தாருடன் காரில் வீட்டிற்கு புறப்பட்டார். கடற்கரையில் இருந்து ரயில்வே நிலையம் அருகே வரும்போது போதை தலைக்கேறிய அவர் காரை தாறுமாறாக ஊட்டியதில் சாலையில் சாலையில் நின்றுகொண்டிருந்த மற்றும் எதிரே வந்த இருசக்கர வாகனம் உட்பட 25-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதனால் அச்சத்தில் அலறிய பொதுமக்கள் ஆறுமுகத்தின் காரை அடித்து உடைத்ததோடு அவருக்கும் தர்மஅடி கொடுத்தனர். ஆறுமுகத்தின் கார் மோதியதில் காயமடைந்த பொதுமக்கள் 5 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: