தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் 8 மாவட்டங்களில் இன்று கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, அரியலூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தது. இன்றும், நாளையும் லட்சத்தீவு, கேரளாவை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: