×

பெங்களூருவில் காதலிக்க மறுத்த இளம்பெண் மீது ஆசிட் வீசி தலைமறைவானவர் திருவண்ணாமலை ஆசிரமத்தில் சிக்கினார்-கர்நாடக போலீசார் சுற்றி வளைப்பு

திருவண்ணாமலை : கர்நாடக மாநிலம், பெங்களூரு  காமாட்சிபாளையம் ஹெக்கனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர், சுங்கதகட்டே எனும் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது தந்தை காய்கறி கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில், இளம்பெண்ணின் உறவினர் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர் நாகேஷ்பாபு(29), பட்டதாரி. இவர், அந்த இளம்பெண்ணை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், அதை ஏற்க அந்த பெண் மறுத்துவிட்டார். எனவே, தொடர்ந்து அந்த பெண் வேலை செய்யும் நிதி நிறுவனத்துக்கு வந்து காதலிக்குமாறு தொந்தரவு செய்துள்ளார்.

தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், போலீசில் புகார் செய்வதாக இளம்பெண் எச்சரித்துள்ளார். அதனால், ஆத்திரமடைந்த நாகேஷ்பாபு, கடந்த மாதம் 28ம் தேதி, பிளாஸ்டிக் கவரில் மறைத்து கொண்டு சென்ற திராவகத்தை(ஆசிட்) நிதி நிறுவனத்தின் வாசலில் நின்றிருந்த இளம்பெண் மீது வீசிவிட்டு தப்பினார். அதனால், படுகாயம் அடைந்த இளம்பெண், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

 இந்நிலையில், பெங்களூருவில் இருந்து தப்பிய நாகேஷ்பாபு, திருவண்ணாமலையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கர்நாடக மாநில போலீஸ் தனிப்படையினர் கடந்த 2 நாட்களாக இங்கு முகாமிட்டு தேடினர். மேலும், நாகேஷ்பாபுவின் போட்டோக்களை காண்பித்து, ஆட்டோ டிரைவர்களிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது, காவி உடையணிந்து சாமியார் வேடத்தில் நாகேஷ்பாபு இருப்பதாக துப்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து, சாமியார்கள் தங்கியிருக்கும் கிரிவலப்பாதை, ஆசிரமங்கள் போன்ற இடங்களில் சீருடையணியாத தனிப்படை போலீசார் தீவிரமாக தேடினர். அப்போது, செங்கம் சாலையில் உள்ள ஒரு ஆசிரமத்தில், வாலிபர் நாகேஷ்பாபு நேற்று மாலை தியானம் செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து, அவரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். காவி உடையணிந்த ஒருவரை ேபாலீசார் அதிரடியாக கைது செய்து இழுத்துச்சென்றது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், பலத்த பாதுகாப்புடன், கர்நாடக மாநிலத்துக்கு நாகேஷ்பாபுவை போலீசார் கொண்டு சென்றனர். இதுகுறித்து, கர்நாடக மாநில தனிப்படை போலீசாரிடம் விசாரித்தபோது, ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி கிரிவலத்துக்கு திருவண்ணாமலைக்கு நாகேஷ்பாபு வருவது வழக்கம் என்ற தகவல் விசாரணையில் கிடைத்தது. எனவே, சந்தேககத்தின் அடிப்படையில் திருவண்ணாமலையில் முகாமிட்டு தேடினோம்.

மேலும், ஆசிட் வீசிய சம்பவம் நடந்ததில் இருந்து செல்போனை நாகேஷ்பாபு பயன்படுத்தவில்லை. எனவே, அவரது நடமாட்டத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்தது. அதிர்ஷ்டவசமாக, திருவண்ணாமலையில் உள்ள ஆட்டோ டிரைவர்கள், போட்டோவை காட்டியதும், மிகச்சரியான துப்பு கொடுத்தனர். எனவே, விரைவில் கைது செய்ய முடிந்தது என்றனர்.

Tags : Bangalore ,Thiruvannamalai Ashram ,Karnataka , Thiruvannamalai: A 25-year-old girl from Hekkanahalli, Kamathchipalayam, Bangalore, Karnataka. He is a customs officer
× RELATED வறட்சி நிவாரணம் வழங்க ஒன்றிய அரசுக்கு...