×

வாலாஜா அகத்தீஸ்வரர் கோயிலில் தொடரும் அதிசயம் அம்மன் சன்னதியில் எண்ணெய் ஊற்றியதும் தானாக எரிந்த விளக்கு-24 மணிநேரமும் எரிவதால் பக்தர்கள் ஆச்சரியம்

வாலாஜா : வாலாஜா அகத்தீஸ்வரர் கோயில் அம்மன் சன்னதியில் எண்ணெய் ஊற்றியதும் தூங்கா விளக்கு தானாக எரிந்து பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த வன்னிவேட்டில் புவனேஸ்வரியம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. க்ஷடாரண்ய ஷேத்திரங்களில் ஒன்றான இக்கோயில் அர்ச்சகர்களாக மனோஜ், கிருஷ்ணசாமி உள்ளனர். வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை அர்ச்சகர் கோயிலை திறந்து சுவாமி மூலவர் சன்னதியில் உள்ள தூங்கா விளக்கை ஏற்றியுள்ளார். தொடர்ந்து, அம்மன் சன்னதி தூங்கா விளக்கிற்கு எண்ணெய் ஊற்றிய அர்ச்சகர் விளக்கை ஏற்ற திரியையும், தீப்பெட்டியையும் கொண்டுவர மூலவர் சன்னதிக்கு சென்றாராம்.

அங்கு திரி கிடைக்காமல் மீண்டும் அம்மன் சன்னதிக்குள் திரும்பியபோது, எண்ணெய் ஊற்றப்பட்ட விளக்கில் தானாக வழக்கத்துக்கு மாறாக கிழக்கு முகமாக தீபம் சுடர்விட்டு எரிந்ததை கண்டு ஆச்சரியமடைந்தார். இதையறிந்து அங்கிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர். பின்னர், நேற்று முன்தினம் இரவு விளக்கை அணைக்காமல் கோயிலை பூட்டிவிட்டு அர்ச்சகர் சென்றார். நேற்று காலை மீண்டும் அம்மன் சன்னதியை திறந்தபோது விளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டிருந்ததுடன் அதில் ஊற்றப்பட்ட எண்ணெயின் அளவு குறையாமல் இருந்ததாம்.
இதையறிந்த வாலாஜா, வன்னிவேடு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்தனர். இதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

இந்த கோயிலில் ஏற்கனவே 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அதிசயம் நடந்தது. இந்த  கோயிலின் அறங்காவல் குழு தலைவராக இருந்தவரும், கைலாய யாத்திரை சென்று திரும்பியவருமான சாம்ராஜ்யலட்சுமியும், அவரது தோழியான கங்கம்மாவும் 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி இரவு 7 மணியளவில் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முதலில் புவனேஸ்வரியம்மன் சன்னதிக்கு சென்றனர்.

அப்போது அங்குள்ள பஞ்சகோஷ்ட மூர்த்தியான துர்க்கையம்மன் மாடத்தில் இருந்து இறங்கும் படிகளில் மங்கலான உருவத்தில் சிறு பெண் கொலுசு சத்தம் ஒலிக்க இறங்கி பிரகாரத்தை சுற்றி நடந்து சென்றது. அப்பெண்ணை அழைத்தபடி 2 பேரும் பின்தொடர்ந்து சென்றபோது அந்த உருவம் புவனேஸ்வரியம்மன் சன்னதி மூலவருடன் சென்று ஐக்கியமானது.
மேலும் அந்த உருவம் நடந்து சென்ற பிரகா தரையில் சிறுபெண்ணின் பாதங்கள் கல்லில் செதுக்கியதுபோல் அழுந்த பதிந்திருந்தது. இதை பார்த்த இருவரும் மெய்சிலிர்த்து போயினர். கலியுகமான இக்காலத்திலும் இறைவன் தனது அதிசயங்களை நிகழ்த்துவான் என்பதற்கு அத்தாட்சியாக தரையில் பதிந்த அம்மனின் பாதங்களை பக்தர்கள் காணும் வகையில் பாதுகாத்துள்ளனர்.

Tags : Wallaja Akhatiswara ,Amman Shrat , Walaja: After pouring oil on the Walaja Agathiswarar Temple Amman Sannathi, the sleeping lamp lights up automatically to entertain the devotees.
× RELATED வாலாஜா அகத்தீஸ்வரர் கோயிலில் தொடரும்...