கர்நாடகாவில் காதலிக்க மறுத்த இளம்பெண் மீது ஆசிட் வீசிவிட்டு தலைமறைவான இளைஞர் கைது

பெங்களூரு: கர்நாடகாவில் காதலிக்க மறுத்த இளம்பெண் மீது ஆசிட் வீசிவிட்டு தலைமறைவான இளைஞரை திருவண்ணாமலையில் சாமியார் வேடத்தில் இருந்தபோது போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சுங்கத்கட்டே பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணை அதே பகுதியை சேர்ந்த நாகேஷ் என்ற இளைஞர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இதற்க்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்ததால் கடந்த மாதம் 28-ம் தேதி அவரது முகத்தில் இளைஞர் நாகேஷ் ஆசிட் வீசிவிட்டு தப்பியோடியுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கர்நாடக போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஆசிரமம் ஒன்றில் இளைஞர் உள்ளதாக தகவல் வந்தது. இதையடுத்து மாற்று உடையில் அங்கு சென்ற கர்நாடக போலீசார், காவி உடை அணிந்து தியானத்தில் இருந்த இளைஞரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அந்த இளைஞரை கர்நாடகாவுக்கு போலீசார் அளித்து சென்றனர்.

Related Stories: