×

'சிவர்ஸ்கி ஆற்றை கடக்கும் ரஷ்யாவின் முயற்சி முறியடிப்பு'!: உக்ரைனில் ரஷ்யா அமைத்த தற்காலிக பாலம் ஏவுகணைகள் மூலம் தகர்ப்பு..!!

கீவ்: உக்ரைன் நாட்டில் ரஷ்யா அமைத்த தற்காலிக பாலத்தை ஏவுகணைகள் மூலம் தகர்த்தப்பட்டதாக அந்நாட்டு ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கையை எடுத்து வருகிறது. டான்பாஸ் மாகாணத்தில் ஓடும் சிவர்ஸ்கி ஆற்றை கடக்க முயன்ற ரஷ்ய படைகள் மீது உக்ரைன் ராணுவத்தினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஆற்றை கடக்க ரஷ்யா அமைத்திருந்த தற்காலிக பாலம் தகர்க்கப்பட்டது.

மேலும் ரஷ்ய படையின் பெரும்பாலான வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும், ஏராளமான வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் நுழைவதற்காக சிவர்ஸ்கி ஆற்றை 3 முறை ரஷ்ய ராணுவத்தினர் கடக்க முயன்றதாகவும் அது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அந்நாடு தெரிவித்தது. இதனிடையே போர் குற்றத்தில் ஈடுபட்டதாக ரஷ்ய வீரர் மீது குற்றம்சாட்டப்பட்டு உக்ரைன் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் சுகாதார மையங்களை குறிவைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதாகவும், 570 சுகாதார மையங்கள், 101 மருத்துவமனைகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்க்கி குற்றம்சாட்டியுள்ளார். பிரேசிலில் தஞ்சம் அடைந்துள்ள உக்ரைன் மக்களுக்கு உணவு வழங்கப்படுவதாக அகதிகள் முகாம் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே போர் காரணமாக போலந்தில் செயல்பட்டு வந்த உக்ரைனுக்கான இந்திய தூதரகம் வரும் 15ம் தேதி முதல் தலைநகர் கீவில் இயங்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 


Tags : Russia ,Shivarsky River ,Ukraine , Shivarsky River, Russia, Ukraine, bridge, missile
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...