×

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது ஒன்றிய அரசு..!!

டெல்லி: இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து வகையான கோதுமை ஏற்றுமதிக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அரசின் அனுமதி பெற்று குறிப்பிட்ட நாடுகளில் உணவு பாதுகாப்புக்காக கோதுமை அனுப்ப மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் கோதுமை விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் கோதுமை விலை உயர்ந்து வருவதால் பதுக்கல் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இத்தகைய சூழலில் கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கோதுமை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகளை விதிக்கவும் ஒன்றிற் அரசு பரிசீலனை செய்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு கூறுகையில், சர்வதேச அளவில் கோதுமை விலை உயர்ந்து வருகிறது. இதையடுத்து இந்தியாவின் ஒட்டுமொத்த உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், அண்டை நாடுகள், அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் கோதுமை விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விலை கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : United Kingdom ,India , India, Overseas, Wheat Exports, Government of the United States
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!