புரட்சி பாரதம் கட்சி தலைவராக பூவை எம்.ஜெகன்மூர்த்தி பதவியேற்று 20 ஆண்டு நிறைவு, பிறந்த நாள் விழா

திருவள்ளூர்: புரட்சி பாரதம் கட்சி மற்றும் ஏபிஎல்எப் தலைவராக உள்ள பூவை எம்.ஜெகன்மூர்த்தி  பதவியேற்று 20 ஆண்டுகள் முடிவடைந்ததை முன்னிட்டு, அதற்கான விழா மற்றும் பிறந்தநாள் விழா சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தது. மாநில நிர்வாகிகள் எம்.மாறன், ஐ.ஏழுமலை, பா.காமராஜ் தலைமை வகித்தனர். மாநில நிர்வாகிகள் பி.சைமன்பாபு, வளசை எம்.தர்மன், சி.எல்.எட்மன், ஒய்.ஜான்சன் ஆம்ஸ்டிராங், ஜி.பெரமையன், இ.ரமேஷ் வரவேற்றனர். நிர்வாகிகள் எம்.முகிலன், கே.பலராமன், பழஞ்சூர் பா.வின்சென்ட், பி.வீரமணி, பூவை ஆர்.சரவணன், கூடப்பாக்கம் இ.குட்டி, கே.எம்.தர், கே.எஸ்.ரகுநாத், எஸ்.ஏகாம்பரம், என்.மதிவாசன், எம்.தர்மன், டி.கே.சீனிவாசன் முன்னிலை வகித்தனர். முதன்மை செயலாளர் டி.ருசேந்திரகுமார் துவக்க உரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக அனைத்திந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவரும், பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சருமான மணீந்தர் ஜீத் சிங் பிட்டாஜீ, லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் எம்பி, முன்னாள் அமைச்சர் பா.பெஞ்சமின், எழுத்தாளர் பேரவையின் செயலாளர் யாக்கன், மூத்த பத்திரிகையாளர் எவிடன்ஸ் கதிர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ, சிறப்பு அழைப்பாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து, திருவள்ளுவர் சிலையும், வீர வாளும் பரிசளித்தார்.

இதில் மாநில இளைஞரணி நிர்வாகிகள் மணவூர் ஜி.மகா, பிரீஸ் ஜி.பன்னீர், வியாச பா.சிகா, பூவை என்.முரளி, சி.பி.குமார், நயப்பாக்கம் டி.மோகன், சென்னீர் டி.டேவிட்ராஜ், சிட்கோ இ.ராஜேந்திரன், என்.பி.முத்துராமன், எம்.பி.வேதா, ஏ.ஜான் அலெக்ஸ், ஏ.கே.சிவராமன், செஞ்சி ஜெ.ஜவகர், காட்டுப்பாக்கம் ஜி.டேவிட், தொழுவூர் டி.எம்.எஸ்.கோபிநாத், நேமம் எம்.மங்கள் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை மற்றும் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: