பாமக பயிலரங்கம் முகப்பில் 16ம் தேதி கொடியேற்றம்: ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: பாமக அரசியல் பயிலரங்கம் கடந்த 2002ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இது வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு அரசியல் பயிரங்கத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பெருந்தொற்று பரவுவதை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் அரசியல் பயிலரங்கத்தில் பயிற்சி வகுப்புகள் தடைபட்டிருந்தன. மீண்டும் பயிற்சி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசியல் பயிலரங்கம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் பயிலரங்க வளாகத்தின் முகப்பில் வரும் 16ம் தேதி காலை 11 மணிக்கு கொடியேற்று விழா நடைபெறவுள்ளது. எனது முன்னிலையில் நடைபெற இருக்கும் விழாவில் பாமக தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பாமக கொடியை ஏற்றவுள்ளார்.

Related Stories: