நீர்வளத்துறையில் உதவி பொறியாளர்கள் 245 பேருக்கு பதவி உயர்வு: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: தமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள அரசாணை: நீர்வளத் துறையில் 326 உதவி செயற்பொறியாளர்கள் பணியிடங்கள் காாலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்பும் வகையில், தகுதியான உதவி பொறியாளர்களுக்கு முதுநிலை அடிப்படையில்  பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

அதன்படி டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடியாக உதவி பொறியாளர்களாக பணியில் சேர்ந்த 186 பேருக்கும், இளநிலை வரை தொழில் அலுவலர் நிலையில் இருந்து உதவி பொறியாளராக பணியாற்றும் 29 பேருக்கும், இளநிலை பொறியாளராக பணியாற்றும் 20 பேருக்கும், தொழில்நுட்ப உதவியாளர் நிலையில் இருந்து உதவி பொறியாளராக பணியாற்றும் 10 பேருக்கும் என மொத்தம் 245 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து உதவி செயற்பொறியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்ட 245 பேரும் பணியிட மாறுதல் செய்து முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: