×

அறிவியல் வரலாற்றில் மைல் கல் நிலவு மண்ணில் செடி முளைத்தது: நாசா விஞ்ஞானிகள் சாதனை

வாஷிங்டன்: அறிவியல் வரலாற்றில் முதல் முறையாக, நிலவில் இருந்து கொண்டு வந்த மண்ணில் செடிகளை வளர்த்து நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். நிலவில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். இந்நிலையில், நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அனுப்பிய அப்பல்லோ விண்கலம் தனது 11, 12 மற்றும் 17வது விண்வெளி பயணத்தின் போது, நிலவில் இருந்து பூமிக்கு அனுப்பிய மண் மாதிரிகளை கொண்டு செடிகளை வளர்க்க அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர். இந்த முயற்சியில் நாசா விண்வெளி மையமும் இணைந்தது. அப்பல்லோ விண்கலத்தின் 3 பயணங்களின் போதும் நிலவில் இருந்து மொத்தம் 12 கிராம் மண் மட்டுமே எடுத்து வரப்பட்டிருந்தது.
* ஒவ்வொரு செடிக்கும் ஒரு கிராம் அளவுள்ள மண் மட்டுமே ஆய்வுக்காக ஒதுக்கப்பட்டது.
* அதனுடன் நீர் மற்றும் செடிகளின் விதைகளை சேர்த்து, தூய்மையான அறையில் சீலிடப்பட்ட கண்ணாடி பெட்டிகளில் சூரிய ஒளி, காற்று கிடைக்கும் வகையில் வைத்தனர்.
* நிலவு மண் ஊட்டச்சத்து குறைவானது ன்பதால், தினசரி ஊட்டச்சத்து கரைசல் ஊற்றப்பட்டது. கூடுதலாக, அவற்றுடன் அரபிடோப்சிஸ் செடியின் விதைகளும் சேர்க்கப்பட்டது.
* சில நாட்களில் விதைகள் அனைத்தும் முளைத்து இருந்தன.  இதன் மூலம், நிலவு மண்ணில் செடி முளைக்கும் என்பதை உறுதியாகி இருக்கிறது.
* இருப்பினும், இவை பூமியில் விளையும் செடிகளை போன்று வலுவாக இல்லை. மிக மெதுவாகவும் வளர்ந்தன.  வேர்களின் வளர்ச்சி தடைபட்டது.
* சில செடிகளில் இலைகள் கூட வளர்ச்சி அடையவில்லை.  சிவப்பு நிறத்தில் புள்ளிகள் காணப்பட்டன. - இருப்பினும், இந்த ஆராய்ச்சி நாசாவின் விண்வெளி ஆய்வின் முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது.

Tags : NASA , Milestone in the history of science The plant sprouted in the moon soil: NASA scientists record
× RELATED வானிலை நிலவரங்களை துல்லியமாக...