அசோசெம் தமிழ்நாடு மாநில வளர்ச்சி கவுன்சில் தலைவராக காவேரி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் நியமனம்

சென்னை: காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ், 2022-23ம் ஆண்டுக்கான அசோசெம் தமிழ்நாடு மாநில வளர்ச்சி கவுன்சிலின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். லைஃப்செல் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்டின் தலைவர் அபயகுமார், சதர்ன் போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஜெய்குரோனா மற்றும் ஓபிஜி பவர் வென்ச்சர் பிஎல்சியின் தலைவர் அரவிந்த் குப்தா, வளர்ச்சி கவுன்சிலின் இணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். இம்மாநிலத்தில் துறை ரீதியான அசோசெம்மின் நடவடிக்கைகளை இவர்கள் முன்னின்று வழிநடத்துவர்.

தமிழ்நாட்டில் செயல்படும் தொழில் அமைப்புகளின் பிரதிநிதியாக திகழும் அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அண்டு இண்டஸ்ட்ரி ஆஃப் இந்தியா செயலாக்க நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களால் இந்நியமனங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும்,  டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் பேசியதாவது: இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்காற்றியிருக்கின்ற அசோசெம் போன்ற 100 ஆண்டுகள் தொன்மையான சங்கத்தின் பொறுப்பை வகிப்பதில் தனக்கு மகிழ்ச்சி. இந்த பொறுப்பில் தன்னை நியமனம் செய்ததற்காக செயலாக்க நிர்வாக குழுவின் உறுப்பினர்களுக்கு நன்றி.  இவ்வாறு பேசினார்.

Related Stories: