இத்தாலி ஓபன் அரையிறுதியில் ஸ்வியாடெக்

ரோம்: இத்தாலி சர்வதேச டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில்   விளையாட நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் தகுதி பெற்றார். காலிறுதியில் கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்குவடன் (21 வயது, 90வது ரேங்க்) நேற்று மோதிய ஸ்வியாடெக் (20 வயது, போலந்து) 7-6 (7-2), 6-0 என்ற நேர் செட்களில் வென்றார். நடப்பு சீசனில் ஸ்வியாடெக் தொடர்ச்சியாக 25வது வெற்றியைக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: