மயிலாப்பூர் ஆடிட்டர் தம்பதி கொலை வழக்கு 40 கோடி மாயமானது குறித்து விசாரணை தொடங்கியது: குற்றவாளிகளை 5 நாள் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி

சென்னை: மயிலாப்பூர் ஆடிட்டர் தம்பதி கொலை வழக்கில் கைதான 2 பேரை, சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவுப்படி 5 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில், ₹40 கோடி குறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாப்பூர் பிருந்தாவன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் (60). இவரது மனைவி அனுராதா. இவர்களுடைய மகள் சுனந்தா, மகன் சஸ்வத் அமெரிக்காவில் உள்ளனர். காந்த் திறமையான ஆடிட்டர் என்பதால் பல தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களின் கணக்குகளை ஆடிட்டி செய்து வந்தார். இதுதவிர அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ‘இன்பீம்’ என்ற பெயரில் சாப்ட்வேர் கம்பெனி ஒன்று நடத்தி வந்தார். தனது மனைவி அனுராதாவுடன் விமானத்தில் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த், கடந்த 7ம் தேதி அதிகாலை அவரது வீட்டில் வைத்து நம்பிக்கைக்குரிய நேபாளத்தை சேர்ந்த கார் டிரைவர் கிருஷ்ணா கொலை செய்தார். இது குறித்து புகாரின் பேரில் மயிலாப்பூர் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் கிருஷ்ணா, கூட்டாளி ரவி ராய் ஆகியோரை கைது செய்து, நகை, பணம் ஆகியவற்றை மீட்டனர். ஆனால் நிலம் விற்2 40 கோடி ரூபாய் மட்டும் சிக்கவில்லை. அதேநேரம் நிலம் விற்பனை செய்த ₹40 கோடி பணத்தை மார்ச் மாதம் ஆடிட்டர் காரில் இருந்து டிரைவர் கிருஷ்ணா உதவியுடன் தான் வீட்டில் வைத்துள்ளார். மறுநாள் மீண்டும் ஆடிட்டர் காந்த் அமெரிக்கா சென்றுவிட்டார்.

இதனால் ₹40 கோடி பணம் வீட்டில் தான் இருப்பதாக  நினைத்து தனது நண்பருடன் திட்டமிட்டு ஆடிட்டர் தம்பதியை கிருஷ்ணா கொலை செய்தார். மேலும் 40 கோடி பணம் குறித்து அமெரிக்காவில் இருந்து வந்த மகள் மற்றும் மகனுக்கும் சரியாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது. நிலம் விற்பனை தொடர்பான விவகாரம் அனைத்தும் தந்தை காந்த் மற்றும் தாய் அனுராதா ஆகியோர் மட்டும் கவனித்து வந்ததாக இருவரும் போலீசாரிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.  இதனால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நேபாளத்தை சேர்ந்த கார் டிரைவர் கிருஷ்ணா அவரது நண்பர் ரவிராய் ஆகியோரை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த மயிலாப்பூர் முடிவு செய்தனர். அதற்காக நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மயிலாப்பூர் போலீசார் 5 நாள் காவலில் கிருஷ்ணா, ரவிராய் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணைக்கு  சைதாப்பேட்டை 23வது குற்றவியல் நடுவர் கவுதம் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில், ஆடிட்டர் தம்பதி கொலை குற்றவாளிகளை 5 நாள் காவலில் விசாரணை நடத்த நடுவர் கவுதம் அனுமதி வழங்கினார்.

அதைதொடர்ந்து போலீசார் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரணை தொடங்கி உள்ளனர். குறிப்பாக ₹40 கோடி பணம் குறித்தும், குற்றவாளி கிருஷ்ணா தனது தந்தை லால் சர்மாவை 15 நாட்களுக்கு முன்பு நேபாளத்திற்கு அனுப்பியது ஏன். ஆடிட்டர் அமெரிக்கா சென்ற பிறகு, நிலம் வாங்கிய நபர்கள் யார் கிருஷ்ணாவை தனியாக சந்தித்து என்ன கேட்டனர் உள்ளிட்ட சந்தேகங்களை போலீசார் 5 நாள் காவலில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக 500க்கும் மேற்பட்ட கேள்விகளை அவர்கள் குற்றவாளிகளிடம் கேட்க தயாரித்துள்ளனர்.

Related Stories: