மார்பக புற்றுநோய்க்கு புதிய மருந்து இந்தியாவில் அறிமுகம்

டெல்லி: மார்பக புற்றுநோய் சிகிச்சை காலத்தை 90% வரை குறைக்கும் வகையிலான புதிய மருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ரோஷ் நிறுவனத்தின் புதிய மருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மருந்துக்கு ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியுள்ளது; ஊசி மூலம் ஒரே முறை மருந்து செலுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. புற்றுநோய் சிகிச்சைக்கு ஆகும் செலவு சுமார் 20% வரை குறைய வாய்ப்பு உள்ளது. 2021 டிசம்பர் வரை உலகம் முழுவதும் 17,000க்கும் அதிகமான பெண்கள் இந்த மருந்து மூலம் பயனடைந்துள்ளனர் என சுவிட்சர்லாந்தின் ரோஷ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories: