×

இறைச்சிக் கடையில் 'சிறு நூலகம்': கஞ்சா, போதைக்கு அடிமையாவோரை மடைமாற்ற திருவள்ளூர் இளைஞர் புது முயற்சி..!!

திருவள்ளூர்: தடம் மாறும் இளைய தலைமுறையை நல்வழிப்படுத்த திருவள்ளூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் இறைச்சி கடையில் சிறு நூலகம் நடத்தி வருவது பாராட்டை பெற்று வருகிறது. திருவள்ளூர் அருகே ஈக்காட்டை சேர்ந்த கார்த்திக், சென்னை மாநில கல்லூரியில் பட்டம் பெற்றவர். வேலை இழந்து வறுமையில் உழன்ற போது நண்பர்கள் இவருக்கு இறைச்சி கடை வைத்து கொடுத்துள்ளனர். நண்பர்கள் உதவியால் வளர்ந்த அவர், சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில் இறைச்சி கடையில் சிறு நூலகம் வைத்துள்ளார்.

இறைச்சி வெட்டும் நேரத்தை கூட வாடிக்கையாளர் வீணாக்கக்கூடாது என்பதற்காக செங்கிஸ்கான், மாவோ, ஆபிரகாம் லிங்கம் முதல் அம்பேத்கர் முதல் பெரியார் வரை அனைத்து சிந்தனையாளர்களின் புத்தகங்களையும் வைத்துள்ளார். கார்த்திக்கின் இந்த முயற்சி வாடிக்கையாளர்களிடமும் வரவேற்பை பெற்றிருக்கிறது. திருவள்ளூரில் கஞ்சா போதைக்கு இளைஞர்கள் அதிகம் அடிமையாகி இருப்பது கவலையளிப்பதாக கூறும் கார்த்திக், அவர்களின் சிந்தனையை தூண்டவே இம்முயற்சி எடுத்ததாக கூறினார்.


Tags : Thiruvallur , Butcher shop, 'small library', youth
× RELATED திருவள்ளூர் தொகுதியில் வேட்பாளர்கள்...