×

கடந்த 7 நாட்களில் 15 கிலோ 350 கிராம் கஞ்சா, 1,005 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 1 இருசக்கர வாகனம் மற்றும் 1 செல்போன் பறிமுதல்: சங்கர் ஜிவால் தகவல்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், கடந்த  7 நாட்கள் சிறப்பு சோதனை மேற்கொண்டு, கஞ்சா உட்பட போதை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக  06 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 கிலோ 350 கிராம் கஞ்சா, 1,005 உடல்வலி நிவாரண மாத்திரைகள்,  1 இருசக்கர வாகனம் மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்,  அவர்கள் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன் பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 06.05.2022 முதல் 12.05.2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19 குற்றவாளிகள் கைது.  15 கிலோ 350 கிராம் கஞ்சா, 1,005 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 1 இருசக்கர வாகனம் மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் குறிப்பிடும்படியாக T-4 மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 11.05.2022 அன்று மதியம், போரூர், சுங்கச்சாவடி அருகே கண்காணித்தபோது, அங்கு 1 பெண் உட்பட 3 நபர்கள் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.     

அதன்பேரில், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 1.பிரியங்கா (எ) பிரியா, பெ/வ.26, க/பெ.கோபாலகிருஷ்ணன், வயர்ல்ஸ் ஸ்டேஷன் ரோடு, போரூர், சென்னை, 2.பாபு, வ/20, த/பெ.கோபாலகிருஷ்ணன், சித்தி விநாயகர் கோயில் தெரு, ஶ்ரீலஷ்மிநகர், மதுரவாயல், 3.கார்த்திக், வ/29, தபெ.ரவி, சோழன் நகர் 2வது தெரு, மதுரவாயல், ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல, H-8 திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 07.05.2022 அன்று திருவொற்றியூர் இரயில் நிலையம் அருகில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 1.சேதுராமன், வ/30, த/பெ.முரளி, அண்ணாமலை நகர் 7வது குறுக்கு தெரு, திருவொற்றியூர், 2.சங்கரநாராயணன், வ/25, த/பெ.வேலு, நாவலர் தெரு, அண்ணாநகர், கொருக்குப்பேட்டை ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 கிலோ 500 கிராம் எடை கொண்ட கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், N-4 மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 06.05.2022 அன்று பூண்டி தங்கம்மாள் தெருவில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, அங்கு சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த 1.முகேஷ், வ/20, த/பெ.முருகன், 152வது பிளாக், சுனாமி குடியிருப்பு, ஆல் இந்தியா ரேடியோ நகர், எண்ணூர்,  2.கார்த்தி (எ) எட்டு ஊசி, வ/20, த/பெ.கண்ணன், A பிளாக், HLL நகர், சுனாமி குடியிருப்பு, தண்டையார்பேட்டை, 3.பரத் (எ) அருவாமனை பரத், வ/19, த/பெ.கோபால், F பிளாக்,  HLL நகர், சுனாமி குடியிருப்பு, தண்டையார்பேடை ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து Clonazepam, Alprazolan ஆகிய உடல்வலி நிவாரண மாத்திரைகள் - 955 Nos. பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Sankar Jiwal , 15 kg 350, g cannabis, 1,005 body aches, seizure, Shankar Jiwal
× RELATED சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர்...