ஐபிஎல்2022: பஞ்சாப்பை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழையுமா பெங்களூரு?

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் 60வது லீக் போட்டியில் பெங்களூரு-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.  பெங்களூரு அணி இதுவரை ஆடிய 12 ஆட்டங்களில் 7 வெற்றி 5 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 11 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி 6 தோல்வி என புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

பெங்களூரு இன்று பஞ்சாபை வீழ்த்தினால் பிளே ஆப் சுற்றுக்குள் எளிதாக நுழைந்துவிடும். அதே நேரத்தில் பஞ்சாப் பிளே ஆப் வாய்ப்பு கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்ப வேண்டிய நிலைதான். இதனால் வெற்றிக்காக பெங்களூரு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். அதே நேரத்தில் பஞ்சாப்பும் பெங்களூரை வீழ்த்த போராடலாம் என்பதால் போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: