இத்தாலி ஓபன் டென்னிஸ்; நடால், படோசா அதிர்ச்சி தோல்வி

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த போட்டியில், 2ம் நிலை வீரரான ஸ்பெயினின் பவுலா படோசா, ரஷ்யாவின் டாரியா கசட்கினாவுடன் மோதினார். இதில் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் கசட்கினா வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தார். துனிசியாவின் ஓன்ஸ் ஜபீர் 6-3, 6-2 என கஜகஸ்தானின் யூலியா புடின்ட்சேவாவையும், கிரீசின் மரியா சக்கரி 6-2, 7-5 என அமெரிக்காவின் கோகா காப்பையும் வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தனர். கனடாவின் பியான்கா ஆண்ரெஸ்கு, பெலாரசின் அரினா சபலென்கா ஆகியோரும் கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.

கால்இறுதி போட்டிகளில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக்-பியான்கா ஆண்ரெஸ்கு, ஓன்ஸ் ஜபீர்-மரியாசக்கரி, அரினா சபலென்கா- அமெரிக்காவின் அனிசிமோவா, டாரியா கசட்கினா- சுவிட்சர்லாந்தின் ஜில் டீச்மேன் மோதுகின்றனர். ஆடவர் ஒற்றையரில் 3ம்நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 6-1, 5-7, 2-6 என கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ்விடம் தோல்வி அடைந்து கால் இறுதி வாய்ப்பை இழந்தார். நம்பர் 1 வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 6-2, 6-2, என்ற செட் கணக்கில், ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்காவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories: