ஈழத்தமிழர்களின் கண்ணீரை துடைக்க முதலமைச்சர் முன்வந்து இருப்பதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம்: வைகோ பாராட்டு

சென்னை: ஈழத்தமிழர்களின் கண்ணீரை துடைக்க முதலமைச்சர் முன்வந்து இருப்பதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம் என வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு வைகோ, திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இலங்கைக்கு அரிசி, மருந்து, பால் பொருட்கள் அனுப்புவது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினோம். ரூ.134 கோடி மதிப்புள்ள 40,000 டன் உயர் தர அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான 137 மருந்து பொருட்கள், ரூ.15 கோடி மதிப்புள்ள 500 டன் பால் பவுடர் தமிழக அரசு சார்பில் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளது என்று குறிப்பிட்டார்.

இலங்கை தமிழர்கள் கண்ணீரை துடைத்திருக்கிறார் முதல்வர் என்று பெருமிதம் தெரிவித்த வைகோ, ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட துயரத்தை போக்க என்ன செய்ய வேண்டுமோ அதனை படிப்படியாக செய்வோம் என முதலமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார் என கூறினார். தமிழ்நாட்டில் இருந்து அதிகாரிகளை அனுப்பி ஏற்பாடுகளை செய்திருக்கும் முதலமைச்சர், நாடாளுமன்ற குழுவை மத்திய அரசை வலியுறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நிவாரணம் உரியவர்களுக்கு சென்று சேரவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு உலக தமிழர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

Related Stories: