ஏரியை ஆக்கிரமித்து பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்கள் அகற்றம்-வருவாய் துறை நடவடிக்கை

மேல்மலையனூர் : விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகாவுக்குட்பட்ட நாரணமங்கலம் கிராமத்தில் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியினை ஆக்கிரமித்து பயிரிடப்பட்டிருந்த கரும்பு ,நெற்பயிர் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவின் பேரில் வட்டாட்சியர் கோவர்தனன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கனகராஜ் மற்றும் காவல்துறையினர் அகற்றினர். ஏரி பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த இரண்டு வீடுகள் மற்றும் 33 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிரை வருவாய் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அழித்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: