×

தமிழ்நாட்டில் உள்ள 1,250 கிராமப்புற திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 1250 கிராமப்புற திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு தகவல் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் உள்ள 1250 கிராமப்புறத் திருக்கோயில் திருப்பணித் திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற 2021-22 அறிவிப்பில் கிராமப்புறத் திருக்கோயில் திருப்பணித் திட்டத்தின்கீழ் கிராமப் பகுதிகளில் அமைந்துள்ள 1,250 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.2 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்காக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு சார்நிலை அலுவலர்களிடமிருந்து வரப்பெற்ற அறிக்கைகளின்படி 1250 திருக்கோயில்கள் இறுதி செய்யப்பட்டு திருக்கோயில் பெயர் விவரப்பட்டியல் இத்துறை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 1250 திருக்கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள தொல்லியல் வல்லுநர் கருத்துரு மற்றும் மண்டல ஸ்தபதி கருத்துருவுடன் மண்டல அளவிலான வல்லுநர் குழுவின் பரிசீலனைக்குட்படுத்தி அதனை தொடர்ந்து மாநில  அளவிலான வல்லுநர் குழுவின் பரிந்துரை பெற்று பொதுநலநிதியின் மூலம் மண்டல மண்டல இணை ஆணையர் நிலையில் திருக்கோயில் திருப்பணி மேற்கொள்வதற்கான மதிப்பீட்டிற்கு மதிப்பீடு அங்கீகாரம் மற்றும் தொழில்நுட்ப அனுமதி வழங்கி பணிகள் மேற்கொள்ளவும்,  விரைவில் திருப்பணிகள் முடித்து குடமுழுக்கு நடத்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , In Tamil Nadu, 1,250 temples, restoration, Rs 25 crore, Sekarbapu
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...