×

ரஷ்ய தாக்குதலால் உக்ரைனில் இருந்து 60 லட்சம் பேர் வெளிநாட்டில் தஞ்சம்!: 1.4 கோடி பேர் வீடுகளை விட்டு வெளியேறியதாக ஐ.நா. அமைப்பு தகவல்..!!

ஜெனிவா: போரில் 26 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுவிட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்நாட்டின் மீது படையெடுத்துள்ளது. ரஷ்ய தாக்குதலை அடுத்து உக்ரைனில் இருந்து 60 லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்திருப்பதாக ஐ.நா. மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.  இதில் 90 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என அந்த அமைப்பு கூறியுள்ளது. மேலும் ஒரு கோடியே 40 லட்சம் உக்ரைன் நாட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே ஐநா பாதுகாப்பு சபை கூட்டத்தில் பேசிய இந்திய தூதர் ரவிந்திரா, இருநாட்டு போரில் இந்தியா அமைதி மற்றும் தீர்வு காண வலியுறுத்தியதாக கூறினார். அப்பாவி மக்கள் உயிரிழப்பதை தவிர்க்க இந்தியா முயற்சி எடுப்பதாக அவர் தெரிவித்தார். இதனிடையே மரியுபோல் இரும்பு ஆலையில் சிக்கிய உக்ரைன் ராணுவ வீரர்களும், பொதுமக்களும் அங்கிருந்து வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். ஏராளமானோர் கை, கால்களை இழந்து அவதிப்பட்டு வரும் வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு சற்றும் சளைக்காத உக்ரைன் ராணுவத்தினர், ரஷ்யாவின் இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ராணுவ ஹெலிகாப்டர்கள், கவச வாகனங்களை உக்ரைன் ராணுவத்தினர் ஏவுகணை வீசி தாக்கி உள்ளனர். இதனிடையே ரஷ்ய ராணுவ வீரர்கள் 26,000 பேர் போரில் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை நிச்சயமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம் என உக்ரைன் ராணுவத்தினர் கூறியுள்ளனர்.


Tags : Ukraine ,UN , Russian invasion, Ukraine, 60 lakh people, foreign, UN. System
× RELATED ரஷ்யாவில் வாக்குச்சீட்டில் ‘போர்...