×

அசானி புயல் எதிரொலி: சென்னை உள்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, ஆகிய 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8ம் தேதி புயலாக உருவெடுத்தது. அதற்கு அசானி என்று பெயரிடப்பட்டுள்ளது.  அசானி புயல் ஆந்திரா-ஒடிசா மாநிலங்களை மிரட்டி கொண்டிருக்கிறது. அசானி புயலால் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது. அடுத்த 3 மணிநேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர் மாவட்டங்களிலும் அடுத்த 3 மணிநேரத்தில் மித அளவிலான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார் உள்ளிட்ட பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. அசானி புயல் சின்னம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 17 உள்நாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டன. மேலும் சென்னையில் இருந்து அந்தமானுக்கு விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றன.

Tags : Echo ,Asani ,Chennai ,Meteorological ,Center , Asani storm, Chennai, rain in 20 districts
× RELATED வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை!:...