கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாப பலி

ஆலந்தூர்: கீழ்கட்டளை அருணாச்சலம் நகர் 4வது தெருவை சேர்ந்த ராமசந்திரன் மகன் மோனிஷ் (13), கீழ்கட்டளை திருவள்ளுவர் நகர் 3வது தெருவை சேர்ந்த சக்திவேல் மகன் பர்வேஷ் (12) ஆகியோர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் நேற்று சக மாணவர்கள் ரித்து, அஸ்வின் ஆகியோருடன் சேர்ந்து, கீழ்கட்டளை அன்பு நகரில் உள் கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றனர். அங்கு, மோனிஷ், பர்வேஷ் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றபோது, நீரில் மூழ்கினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மெரினா கடற்கரை கமாண்டர்கள் 4 மணி நேரம் தேடி மோனிஷ், பர்வேஷ் ஆகியோரை சடலமாக மீட்டனர்.

Related Stories: