முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்: அண்ணா பல்கலை அறிவிப்பு

சென்னை: முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்லை வெளியிடப்பட்ட அறிக்கை: கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான எம்.எஸ்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 18ம் தேதிக்குள் பொதுப்பிரிவு மாணவர்கள் ரூ.1000 ஐயும், எஸ்.சி., எஸ்.டி மாணவர்கள் ரூ.500ம்  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் போகும் பாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தால், வருகிற ஜூன் 6ம் தேதி நடத்தப்படும் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். 2 மணி நேரம் நடைபெறும் நுழைவுத் தேர்வானது சென்னை, கோயம்பத்தூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இளங்கலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கும் அவகாசம் வழங்கப்பட் டுள்ளது.

Related Stories: