அமைச்சர்கள் மஸ்தான், மனோ தங்கராஜ் இத்தாலி பயணம்

சென்னை: தமிழகத்தை சேர்ந்த பேராயர் தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவதையொட்டி அமைச்சர்கள் மஸ்தான், மனோ தங்கராஜ் இத்தாலி செல்கிறார்கள். கோட்டார் மறை மாவட்டத்தை சேர்ந்த பேராயர் தேவசகாயத்துக்கு இத்தாலி வாடிகன் நகரில் போப் ஆண்டவர் ‘‘புனிதர் பட்டம்” மே 15ம் தேதி வழங்குகிறார். தமிழகத்தை சேர்ந்த ஒருவர் புனிதர் பட்டம் பெறுவது முதல்முறையாகும். அவரை கவுரவப்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் சிறுபான்மை நலத்துறை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர்  கலந்து கொள்கின்றனர். இவர்கள் இன்று காலை 9.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் இத்தாலி செல்கிறார்கள்.

Related Stories: